பொதுவாக சினிமாவில் நடிக்கும் நாயகனுக்கும் நாயகிக்கும் உண்மையாக என்ன வயது இருக்கும் ??
20 இல் இருந்து 25 , 30, 40, 50 வரை இருக்கும் ???
எங்கள் உரையாடல் 20 - 25 வயதே ஆன நாயகனையும் நாயகியையும் பற்றியது.
நமக்கும் இப்பொழுது அதே வயதுதான்
நினைத்து பாருங்கள் அந்த நாயகனின் இடத்தில் நானோ நீங்களோ இருந்தால் ..
நீங்கள் நாயகனாக நடிக்கும் ஒரு சினிமா ;)
நாயகி உங்களுக்கு மிக அருகில் வருகிறாள்,
எவ்வளவு அருகில் என்றால் அவளது மூச்சு காற்று உங்கள் முகத்தில் படும் அளவு நெருங்கி வருகிறாள்
வந்தவள் உங்கள் கையை பிடித்து செல்லமாக உங்கள் பெயரை உச்சரிக்கிறாள்
உங்களுக்குள் என்ன என்ன மாற்றங்கள் நடக்கும் அந்த நொடியில்...
அது கிளர்ச்சியா, காமமா, ??
இதெல்லாம் நடந்தா நல்லாத்தானிருக்கும், அதை பற்றி பேச என்ன இருக்கிறது இப்பொழுது என்கிறிர்களா ?
இந்த சினிமாதான் நமக்கு பலவித உணர்சிகளை அறிமுகப்படுதியதாக இருக்கும்.
காதல், காமம், களவு, நட்பு, கோபம், ஏக்கம், பகட்டு.....
ஏன் வீரம், துரோகம், என பல பல புரியாத உணர்வுகளை பற்றி அரைகுறையாக பாடம் எடுத்தது இந்த சினிமாவாகத்தான் இருக்கும்..
நகரத்தையே பார்க்காத கிராமத்தானுக்கு நகரத்தின் நெளிவு சுளிவுகளையும்,
நகரத்தையே பார்க்காத கிராமத்தானுக்கு நகரத்தின் நெளிவு சுளிவுகளையும்,
கிராமத்தை வெறுக்கும் நகரவாசிக்கு கிராமத்தின் ஈரத்தையும், மண் வாசனையையும், அந்த மனிதர்களின் வாஞ்சையும்,
அறிமுகபடுத்த சினிமாவை தவிர எந்த ஊடகத்தாலும் முடியாது..
வாசிப்பு பழக்கமே இல்லாத இந்த புதிய தலைமுறைக்கு உலகத்தை வெளிச்சம் போட்டு காட்டுவது இந்த சினிமாதான்.
இந்த பொழுதில் சாதகத்தை விட பாதகம் அதிகம் இருந்தாலும் எதிர் வரும் காலத்தில் சமுதாயத்தில் மாற்றம் கொண்டுவரும் நடுநிலையான ஊடகமாக இருக்கப் போவது சினிமாதான்
ஒரு துணிக்கடையின் பின்னால் எவ்வளவு கொடுமைகள் அரங்கேறுகின்றன என்ற காட்டியது 'அங்காடி தெரு'..
பிச்சை என்பது இரக்கமே இல்லாத கயவர்களால் நேர்த்தியாக ஒருங்கிணைந்து நடத்தப்படும் கொடுந்தொழில் என உணர்த்தியது 'நான் கடவுள்'..
ஒரு துணிக்கடையின் பின்னால் எவ்வளவு கொடுமைகள் அரங்கேறுகின்றன என்ற காட்டியது 'அங்காடி தெரு'..
சிறு வாண்டுகளின் உலகத்தை கொண்டாடியது 'பசங்க'..
காவல்துறையின் இருண்ட இன்னொரு பக்கத்தை புரட்டி பயமுறுத்தியது 'மௌனகுரு'..
பெண்களுக்கு எதிரான இளைய சமுகத்தின் பார்வையை கல் நெஞ்சமும் உருகும் வழக்காக தொடுத்தது 'வழக்கு என் 18/9'..
'எய்ட்ஸ்' நோயின் மூலத்தையும் அதன் பாதிப்புகளின் கொடூரத்தையும் சொன்னது 'மிருகம்'..
பேய் பயத்தை அடி வயிற்றில் இருந்து கிளறி உறைய வைத்து பின் எதிர்பார்க்காத நிகழ்வுளால் ஆச்சரியடுத்திய 'பிட்சா'..
இந்த பட்டியல்லுக்கு எல்லையே கிடையாது..
சுதந்திரமாக கருத்தை சொல்ல ஒரே வழி சினிமாதான்.
ஒரே கருத்தை ஆதரித்தும் எதிர்த்தும் படமெடுக்க சினிமாவால் தான் முடியும்.
ஒரே கருத்தை ஆதரித்தும் எதிர்த்தும் படமெடுக்க சினிமாவால் தான் முடியும்.
இந்த சினிமா பல புதிய உயரங்களை எட்டுவது ரசிகர்கள் புது முயற்சிகளுக்கு கொடுக்கும் ஆதரவிலேதான் இருக்கிறது.
முயற்சிகளை ஆதரிக்க தயாரா நாம் ??
இல்லை மசாலாக்களே போதுமா நமக்கு ??
-ல.கி.ரா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக