நக்சல் என்றால் என்னவென்று நண்பனை கேட்டேன் ?
-கோ படத்துல வருமே அதுதான் என்றான்
இன்னொருவன் யூனியன் மாதிரி ஒரு விஷயம் என்றான்
இன்னொருவன் கமுயூனிஸ்ட் என்றான்
ஒருவர் வேலை இல்லா பட்டதாரிகள் ஆயுதம் ஏந்தி போராடும் போராட்டம் என்றார்..
எதோ விளங்குகிற மாதிரி இருந்தது ? விவரித்து சொல்ளுங்கள் என்றேன் !!
கனிம வளங்களை கொள்ளயடிப்பதை ஆயுதம் போராட்டம் மூலம் எதிர்ப்பது என்றார் ?
விவசாய நிலங்களை அபகரிப்பதை தடுக்கும் அமைப்பு என்றார் ?
நேபாளத்தில் இருந்து பரவிய சீனாவின் கைக்கூலிகள் - இது ஒரு காங்கிரஸ்காரரின் கருத்து !!
இது சட்டத்திற்கு உட்பட்டதா என்று கேட்டேன் ?
இல்லை என்று இருவரிடமும் இருந்து பதில் வந்தது
இது தீவிரவாதமா என்றேன் ?
இல்லை என்றே பதில் வந்தது
ஜம்மு கஷ்மீரை பாதுகாக்கும் ராணுவம் இங்கே என் போகவில்லை என்று கேட்டேன் ?
இது மக்கள் வாழும் பகுதி என்றார்கள் அதனால் ராணுவம் போகாது என்றார்கள்
அப்படி என்றால் கஷ்மீரில் மக்கள் வாழவில்லையா ??
பதில் இல்லை இருவரிடமும்
அவர்கள் போராடும் விஷயம் நியாயமானது என்றால் அவர்களை போராடவைத்த உண்மையான குற்றவாளிகள் யார் ?
அவர்கள் போராடும் முறை தவறு என்றால் அதை தண்டிக்காமல் வேடிக்கை பார்த்த உண்மையான குற்றவாளிகள் யார் ?
சத்தமே இல்லை இருவரிடமும்..
விளக்கம் வேண்டிப் போன எனக்கு
பெரும் குழப்பமே எஞ்சி நிற்கிறது..
உங்களுக்கு எதாவது விளங்கினால் சொல்லுங்கள்
குழப்பத்துடன்,
-ல.கி.ரா
கொசுறு: இது வங்காளத்தில் உள்ள 'நக்சல்பாரி' என்ற கிராமத்தில் இருந்து தொடங்கப்பட்டதால் நக்சலைட் இயக்கம் என்று அலைக்கபடுவதாக விக்கி கூறுகிறது

its all my people...In same nation they have all rights but denied...we just discuss what went wrong we don't have time to think about their lives. But we will always complain the Government and politician...Media is created our mindset Maoist are all internal terrorist but it is not fact......
பதிலளிநீக்கு