சஹாராவின் புனே அணி அழுகாத குறையாக தனக்கு நடந்த கொடுமைகளையும், பி.சி.சி.ஐ செய்த பித்தலாட்டங்களையும் தெரியபடுத்தி இந்த விளையாட்டில் நேர்மைக்கும், ஒளிவு மறைவு இல்லாத செயல்பாட்டுக்கும் துளி கூட இடம்கிடையாது என்பதை வெளிக்காட்டியுள்ளது.
ஐ.பி.எல் விளையாட்டில் இருந்து விலகியது மட்டுமில்லாமல்,
இனி இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டை எந்த விதத்திலும் ஆதரிக்க போவது இல்லை என்றும் அறிவித்துள்ளது.
ஐ.பி.எல்'லின் மேல் இன்னும் நம்பிக்கை கொண்டுள்ள ரசிகர்கள் ஏன் இந்த பி.சி.சி.ஐ செயல்பாடுகள் அனைத்தும் இரும்பு திரை போட்டு பாதுகாக்கப்படுகின்றன என்பதை சிந்தித்து பார்க்க மறுக்கிறார்கள்.
சூதாட்டம் என்பது ஒரு சில வீரர்கள் மட்டுமே ஈடுபட்டிருப்பார்கள் என்பது மிக பெரிய நகைச்சுவை, ஏனென்றால் அசாருதீன் , ஜடேஜா போன்ற பாரம்பரியமிக்க வீரர்களை உலகிற்கு அளித்தது நமது இந்திய கிரிக்கெட்.
வீரர்கள் ஏலம் எடுப்பதில் முறைகேடு, அணிகளை ஏலம் எடுப்பதில் முறைகேடு, போட்டி நடத்துவதில் முறைகேடு, உடல் தகுதி இல்லாத வீரர்களை விளையாட வைத்து நோகடித்தது, போட்டி முடிந்தவுடன் வீரர்களை அழகிகலோடு ஆட்டம் போட வைத்தது, போட்டியில் சூதாட்டம் ஆடியது இது தான் ஐ.பி.எல் கிரிக்கெட்டுக்கு செய்த நன்மைகள்.
எனக்கு ரெண்டு மாசம் பொழுது போகணும் யார் எப்படி போன எனக்கு என்ன என்று யோசிப்பவர்கள் விளையாட்டின் உண்மையான ரசிகர்களாய் இருக்க முடியாது.
இதுல ஊர்ப்பற்று , உலகப்பற்று என்று சொல்லி அடுத்தவர்களோடு மாரடிப்பவர்களை என்ன சொல்லி திருத்துவது என்று தெரியவில்லை...
எது எப்படியோ ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள்..
துணை கேள்வி: இந்த ஐ.பி.எல் சூதை கவ்வ போவது மும்பை அம்பானிகள் அல்லது தாத்தாவின் பேரன்களா ??
இப்படிக்கு விளையாட்டின் மேல் அக்கறையுள்ள ஒரு அப்பாவி ரசிகன்
- ல.கி.ரா
(இது மே 22ஆம் தேதி என் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட தன்னிலை அறிக்கை )

ரசிகர்களுக்கு எதைபற்றியும் கவலை இல்லை. கிரிக்கெட், மீடியாவினால் வளர்க்கப்பட்டு செளிம்பாக கொழுப்புடன் திரியும் ஓர் கிடா ! கறிக்கடைக்காரனக்கு தேவை ஒரு கொழுத்த கிடா.. ரசிகர்கள் இங்கு வாடிக்கையாளர்களே! உண்ணும் வரை உணர்ச்சி ! சிறிது நேர ருசி! அவ்வளவே !
பதிலளிநீக்குகொடுமை என்னவெனில் இந்த அணுகுமுறையே எல்லா விஷயங்களிலும் தொடர்கிறது !
சுய நலமானாலும் அதில் தவறில்லை என்பது அவர்களது கருத்து !
இங்கு நானும் ஒரு வாடிக்கையாலனே - ஒரு சுயநல சோம்பேறித் தமிழன் ...
it is everyone knew that, if 2 businessmen meet what will they do they want always makes money...whether you or me it doesn't matter..i don't want who will win or loose this match how much will i get the money after end of the every match...that's matter...you and me are scapegoats...
பதிலளிநீக்கு