பூ விற்று முடித்த பூக்காரி
அந்த பூக்கூடையில் -
தனக்கென கொஞ்சம் பூவையும்,
தன குழந்தைக்கென கொஞ்சம் பலகாரமும்
வாங்கி வைத்து கொண்டு வீடு போகும் பொழுது
பூப்பாலே ஒரு புன்னகை ..
அந்த புன்னகை அழகு !!!
தாய் கொடுத்த பலகாரத்தை
தன பிஞ்சு கைகளில் வைத்து
சிந்தி சிதறி வாயெல்லாம் அப்பியவாரே
அந்த குழந்தை சாப்பிடுமே
அது மொத்தமாய் அழகு !!!
சிந்திய இனிப்பை
சிற்றெறும்புகள் கூட்டமாய் வந்து எடுத்துக் கொண்டு
வெள்ளை சுவரில் நேர்கோட்டில்
வரிசையாய் ஏறுமே
அந்த வரிசையே அழகு !!
அலுப்பு தீர கைகால் அலம்பி
முகம் கழுவி - பொலிவு கூட்டி
தலை வாரி, பொட்டு வைத்து
மீதம் கொண்டு வந்த பூவை
தலையில் வைத்து கொண்டவாரே
நடந்து வருவாளே ஒரு நடை
அந்த நடையழகு !!!
வந்தவள் தன் குழந்தையை பார்த்து
"என்னடி ராஜாத்தி !! என்ன பண்றீங்க ??
சாப்பிடுறீங்களா ??
அம்மாக்கு கொஞ்சம் கொடுங்கம்மா "
என்று கேட்டவாறே
அந்த பிஞ்சு கைகளால் ஊட்டச்சொல்லி
கொஞ்சமாய் உண்ணுவாளே
அந்த ஊட்டலும் உண்ணலும் பேரழகு !!
இது எதையும்விட அழகாய்
நான் எதையும் பார்க்கவில்லை !!
பார்த்தவர்கள் இருந்தால்
அந்த குருடர்களுக்கு
பரிகாசங்களோடு என் பரிதாபங்களை
பரிசாய் அளிக்கிறேன் !!!
-ல.கி.ரா ;)
அந்த பூக்கூடையில் -
தனக்கென கொஞ்சம் பூவையும்,
தன குழந்தைக்கென கொஞ்சம் பலகாரமும்
வாங்கி வைத்து கொண்டு வீடு போகும் பொழுது
பூப்பாலே ஒரு புன்னகை ..
அந்த புன்னகை அழகு !!!
தாய் கொடுத்த பலகாரத்தை
தன பிஞ்சு கைகளில் வைத்து
சிந்தி சிதறி வாயெல்லாம் அப்பியவாரே
அந்த குழந்தை சாப்பிடுமே
அது மொத்தமாய் அழகு !!!
சிந்திய இனிப்பை
சிற்றெறும்புகள் கூட்டமாய் வந்து எடுத்துக் கொண்டு
வெள்ளை சுவரில் நேர்கோட்டில்
வரிசையாய் ஏறுமே
அந்த வரிசையே அழகு !!
அலுப்பு தீர கைகால் அலம்பி
முகம் கழுவி - பொலிவு கூட்டி
தலை வாரி, பொட்டு வைத்து
மீதம் கொண்டு வந்த பூவை
தலையில் வைத்து கொண்டவாரே
நடந்து வருவாளே ஒரு நடை
அந்த நடையழகு !!!
வந்தவள் தன் குழந்தையை பார்த்து
"என்னடி ராஜாத்தி !! என்ன பண்றீங்க ??
சாப்பிடுறீங்களா ??
அம்மாக்கு கொஞ்சம் கொடுங்கம்மா "
என்று கேட்டவாறே
அந்த பிஞ்சு கைகளால் ஊட்டச்சொல்லி
கொஞ்சமாய் உண்ணுவாளே
அந்த ஊட்டலும் உண்ணலும் பேரழகு !!
இது எதையும்விட அழகாய்
நான் எதையும் பார்க்கவில்லை !!
பார்த்தவர்கள் இருந்தால்
அந்த குருடர்களுக்கு
பரிகாசங்களோடு என் பரிதாபங்களை
பரிசாய் அளிக்கிறேன் !!!
-ல.கி.ரா ;)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக